கங்கை சமவெளி நாகரிகம்
கங்கை சமவெளி நாகரிகம்
இரண்டாவது நகர மயமாக்கல் தொடங்கியது
முதல் நகரமயமாக்கல் ஹரப்பா நாகரிகம்
நஞ்சை சாகுபடியில் மற்ற பயிர்களைவிட அரிசி அதிகம் பயிரிடப்பட்டது
இரும்பு உபகரணங்களால் வேளாண்மை எளிதானது
வேளாண் உபரி, கைத்தொழில் வணிக வளர்ச்சி பெருகியதால் மக்கள் நிலையாக வாழத் தொடங்கினார் இரண்டாம் நகரமயமாக்கல்
நகரமயமாக்கல் உருவான மையங்கள்
உஜ்ஜயினி தட்சசீலம் போன்ற வணிக மையம் உருவாகின
ராஜகிருகம் சிராவஸ்தி கௌசாம்பி சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள் உருவாகின
வைசாலி போன்ற புனிதத் தலங்கள்
அரசியல்
வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசியலிலிருந்து பிராந்திய அரசுக்கு மாற்றம் பெற்றது
மக்களின் ஆதரவு ஜனத்திடமிருந்து (இனக்குழு) ஜனபதத்திற்கு (பகுதி) மாறியது
ஜன பதம் என்பதன் பொருள் "இனக்குழுத் தான் கால் பதித்த இடம்"
ஜனபதங்கள் எல்லையை விரிவுபடுத்தி மகாஜனபதங்கள் என வளர்ச்சி பெற்றன
நாட்டிற்கு முக்கிய கூறுகள் -- நிலம், அரசாங்கம் மற்றும் இறையாண்மை
அரசரை மையப்படுத்திய அரசு உருவாகியது
16 ஜனபதங்கள்
காந்தாரம்
காம்போஜம்
அசகம்
வத்சம்
அவந்தி
சூரசேனம்
சேதி
மள்ளம்
குரு
பாஞ்சாலம்
மத்ஸ்யம்
வஜ்ஜி (விரஜ்ஜி)
அங்கம்
காசி
கோசலம்
மகதம்
மகாஜனபதங்கள் அதிகாரத்தின் தன்மையைப் பொறுத்து பிரிக்கப்பட்டன
கண சங்கங்கள்
குடி தலைமை ஆட்சி
- கங்கை சமவெளியில் ஜனபதங்கள் (சிறு நாடுகள்)
- மிதிலை பகுதியின் விரஜ்ஜிகளின் கண சங்கங்கள் பிரபலமானது
- இதன் தலைநகர் வைசாலி
- இது தான் மட்டும் முடிவெடுக்கும் அரசர் அற்றது
இனக்குழுக்களின் தலைவர்கள் கூட்டாக முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர்
இக்ஷ்வாகு விருக்ஷ்னி போன்ற இனக்குழுக்கள் தொடக்க காலத்தில் இருந்தது என ராமாயணம் மற்றும் மகாபாரதம் கூறுகிறது
முடியாட்சிகள்
வைதீக வேத மரபுகள் நடைமுறையில் காணப்பட்டது
கணங்கள் மற்றும் சங்கங்கள் போலன்றி மதகுருமார்கள் இவற்றில் உயர் பதவி வகித்தனர்
அரசரால் ஆட்சி செய்யப்பட்டது
மையப்படுத்தப்பட்ட அதிகாரம்
வாரிசுரிமை அடிப்படையில் மூத்த மகன் அரச பதவி வழங்கப்பட்டது
பரிஷத் மற்றும் சபா அமைப்பு அரசருக்கு ஆலோசனைகளை வழங்கினார்
வரிகள் விதிக்கப்பட்டன.
வேளாண்மை நிலத்தின் மீதான வரி -பலி.
உற்பத்தி வரி --ஒரு பங்கு “பாகா “.
வேறுசில --”தாரா”,“ சுல்கா”.
செல்வம் மிக்க நில உடைமையாளர் --கிரகபதி.
கிரக பதியின் வேலைக்காரர்கள் --தாசர், கர்மகாரர்.
சிறு நில உடைமையாளர் --கசாகா, கிரிஷாகா.
சமூகம்
சமூகம் வர்ண அடிப்படையில் அமைந்தது.
மேல் வர்ணம் அனைத்து இயல்புகளையும் கொண்டது.
விவசாயி கைவினைஞர் --சூத்திரர்.
வேறுசில புதிய சமூகம் சூத்திரருக்குக் கீழே வைக்கப்பட்டனர்.
இவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக் கூறினர்.
இவர்கள் ஊருக்கு வெளியே வசித்தனர்.
இவர்கள் குற்றேவல் வேலைகளைச் செய்தனர்.
தனிமொழி கொண்டிருந்தனர் அது இந்தோ ஆரியர்களால் பேசப்பட்ட மொழி இருந்து மாறுபட்டு இருந்தது.
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2