பேரரசுகளின் தோற்றம்

0

 இந்தியாவில் பேரரசுகளின்
தோற்றம்  மற்றும்  எழுச்சி.


ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி

  •  16 மகாஜனபதங்களில் காசி தொடக்கத்தில் வலிமையாக இருந்தது 

  • பின்னர் கோசலம் ஆதிக்கம்  செய்தது.

  • அதனை அடுத்து கோசலம். விர்ஜ்ஜி, அவந்தி வென்று மகதம் எழுச்சி பெற்றது.

  •  இதுவே முதல் இந்திய பேரரசு.


ஹரியங்கா வம்சம்


  • பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசர் என அறியப்பட்டார் 

  • திருமண உறவு மற்றும் போர்மூலம் எல்லைகளை விரிவு படுத்தினார் 

  • கோசல அரசர் பிரசேனஜித்-திற்கு தன் சகோதரியை மணம் செய்து கொடுத்தார் (சீதனமாகக் காசியை பெற்றார்) 

  • லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை மணந்தார் 

  • அவந்தி அரசுடன் நட்பு 

  • அங்கதேசம் ராணுவ பலத்தால் கைப்பற்றினார் 

  • பல மதங்களை ஆதரித்தார் 

  • இவர் புத்தரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது



அஜாதசத்ரு

  • தந்தை பிந்துசாரர் அவரைக் கொன்று அரியணை ஏறினார் 

  • உடனடியாகப் பிரசேனஜித் அவர்  சீதனமாகத் தந்த காசியை மீண்டும் எடுத்துக் கொண்டார் 

  • இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது பிரசேனஜித் தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு விரட்டப்பட்டார் பின்னர் இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்தார் 

  • இவர் லிச்சாவி மற்றும் மல்லர் உடன் போரிட்டு வென்றார் 

  • இவரின் அமைச்சர் வாசகரா 

  • அஜாதசத்ரு இவரும் புத்தரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது 

  • கிமு 461 இறப்பு. 




  • ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து சிசுநாக வம்சம் தோன்றியது 

  • வாரணாசி அரச பிரதிநிதி ஹரியங்கா அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியது 

  • இவர்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் 

  • கிமு 362 இவர்களிடமிருந்து மகாபத்ம நந்தர் ஆட்சியைக் கைப்பற்றினார்




மகாபத்ம நந்தர் 

  • முதல் நந்த அரசர் 

  • இவருக்கு அடுத்து இவரின் 8 புதல்வர்கள் ஆட்சி செய்தனர்

  •  இவருடன் சேர்த்து நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்

  •  பல சத்ரிய இனக்குழுக்களை  அழித்தனர் 

  • ஒரிசா புவனேஸ்வர் அருகில் உள்ள உதயகிரி ஹதிகும்பா(யானை குகை) கல்வெட்டு 300 வருடம் முன்பு அரசர் நந்தர் வெட்டிய நீர் வடிகாலைப் பற்றிக் கூறுகிறது



பாரசீக மாசிடோனிய படையெடுப்பு

  • ஆறாம் நூற்றாண்டில் சிந்து பகுதியின் காந்தாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆக்கிமீனைட் பேரரசின் சிறு பகுதியாகும் 

  • கி மு 530 பாரசீகப் பேரரசர் சைரஸ் இந்திய படையெடுப்பு நடைபெற்றது கபீஸா நகர் அழிப்பு 

  • காந்தாரம் ஆக்கிமீனைட்டின் --20ஆவது மற்றும் செல்வம் மிக்க சத்ரபி 

  • இது அலெக்ஸாண்டரின் படை எடுப்பவரைப் பாரசீகப் பேரரசின் பகுதியென முதலாம் டாரியஸின் கல்வெட்டு கூறுகிறது 

  • கதாரா, ஹராவதி மகா பகுதிகளின் மக்கள்  ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள் 

  • தட்சசீலம் ஆக்கிமீனைட் பேரரசு முக்கிய பகுதியாகும் --- 1940இல் சர் ஜான் மார்ஷல்  இந்நகரை கண்டறிந்தார் 

  • “எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக“ தட்சசீலம் கருதப்பட்டது 

  • பாணினி --அஷ்டாத்யாயி(இலக்கிய நூல்கள்) தட்ச சீலத்தில் இயற்றப்பட்டதாக அறியப்படுகிறது 

  • சிக்லோய்-- வெள்ளி நாணயம் 

  • அசோகரின் கல்வெட்டு கட்டளைகளில்’ டி பி ‘ ஈரானிய சொல் பதிலாக ‘லிபி ‘ என எழுதப்பட்டுள்ளது



 பண்பாட்டுப் பாதிப்பு 

  • மவுரிய தூண்களான அசோகர் தூண் ஆக்கிமீனைட் பேரரசின் தூண்களுடன் ஒத்துள்ளது தூண் முகட்டில் மணி போன்ற உச்சி அசோகர் சாரநாத் தூணில் உச்சி ராம்பூர் வால் மணி உச்சி 

  • பாடலிபுத்திரம் அரண்மனையின் தூண்கள் ஆக்கிமீனைட் தலைநகர் தூண்கள் போன்று உள்ளது




அலெக்சாண்டர் படையெடுப்பு


  • தன நந்தரின் ஆட்சியின்போது இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் மீது படையெடுத்தார்

  • பஞ்சாப் பகுதியை வென்றார் 

  • கிமு 326 பாரசீகர்களை வென்று இந்தியாவில் நுழைந்தபோது தட்சசீல அரசர் அம்பி அவரிடம் சரணடைந்தார் 

  • இவரின் வரலாற்று சிறப்புமிக்க போர் ஜீலம் நதி மற்றும் பியாஸ் நதிக்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் அரசர் போரஸ் உடன் ஆனது 

  • இப்போர் ஹைடாஸ்பெஸ் போர் என அழைக்கப்பட்டது 

  • இப்போரில் போரஸ் தோற்றார் பின்னர் இவரது கண்ணியத்திற்காக அரியணையை அலெக்சாண்டர் நாட்டைத் திருப்பித் தந்தார் 

  • அலெக்சாண்டர் நாடு திரும்பும்போது டைபாய்டு காரணமாகப் பாபிலோனியாவில்  இறந்தார்  

  • இந்தியாவின் வடமேற்கு பகுதியில் கிரேக்க சத்ரப்புகள்(மாகாணங்கள்)  அமைந்தன

  •  இது இந்தியாவில் மௌரிய பேரரசு அமைய அடிகோலியது

  •  கிரேக்க குடியிருப்புகள்

    •  காபூல் அருகே அலெக்ஸாண்ட்ரியா 

    • பாகிஸ்தான் பெஷாவர் அருகே ப பூகிபெலா

    •  சிந்துவின் அருகே இருந்த அலெக்ஸாண்ட்ரியா



  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !