பதிற்றுப்பத்து

0

பதிற்றுப்பத்து

  • சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
  • பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.
பதிற்றுப்பத்தின் உருவம்:
  • திணை = பாடாண் திணை (புறத்திணை)
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 100 ( கிடைத்தவை 80)
  • புலவர்கள் = 10 (அறிந்த புலவர் 8)
  • அடி எல்லை = 8-57
பெயர் காரணம்:
  • பத்து + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல் கூறுகிறது.
வேறுபெயர்:
  • இரும்புக் கடலை
தொகுப்பு:
  • இந்நூலை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
உரை:
  • பழைய உரை ஒன்று உள்ளது.
  • பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை
பதிற்றுப்பத்தில் புலவர்களும் பரிசும்:


பொதுவான குறிப்புகள்:
  • இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே திணைப் பாடலால் ஆனது.
  • இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
  • ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
  • வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைக்கப்படுகிறது.
  • பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரை செய்திகளை தெரிவிக்கிறது.
  • சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
  • பதிற்றுப்பத்து இசையோடு பாடப்பட்ட நூல்.(இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
  • பகைவரது பெண்டிரின் கூந்தலை அரிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
  • “பிற காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெய்கீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்
  • ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம் பாடப்பட்டுள்ளது தொகுத்தவர் பாடப்பட்டது என்பார் இப்பதிகத்தில் பாடப்பட்ட மன்னர் பெயர் அவர் செய்த போர் கொடைத்திறம் பாடிய புலவர்கள் அவர் பெற்ற பரிசுப்பொருள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன
  •  போர் வீரர்களின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி கூறுகிறது
  •  இடம்பெற்ற சொல் வெள்ளம்
முக்கிய அடிகள்:
  • ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
  • ஈத்தொறு மாவள்ளியன்
  • மாரி பொய்க்குவது ஆயினும்
  • சேரலாதன் பொய்யலன் நசையே
  • வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
  • தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
  • நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்

  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !