இயல் 1 - ஆறாம் வகுப்பு -தமிழ் - தமிழ் தேன்-

0

 

இயல் 1 

ன்பத்தமிழ்

        ⚔ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்
            தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்……. 
             … தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத்  
            தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்    - பாரதிதாசன்

சொல்லும் பொருளும்

  • நிருமித்த       -உருவாக்கிய 
  • விளைவு        -விளைச்சல் 
  • சமூகம்           -மக்கள் குழு 
  • அசதி             - சோர்வு

பொதுவானக்குறிப்புகள் 

  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்
  • பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாகப் பாரதிதாசன் எனப் பெயரைப்  மாற்றிக் கொண்டார்
  • புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர்.
  • பாவேந்தர் என்றும் போற்றுவர்.

தமிழ் கும்மி 

     ⚔  கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்கோ  
          தையரே கும்மி கொட்டுங்கடி…. 
          …  உயிர் மெய் புகட்டும் அற மேன்மை கிட்டும் இந்த 
          மேதினி வாழ வழி காட்டி இருக்கும்                  - பெருஞ்சித்திரனார் 

சொல்லும் பொருளும்

  • ஆழி பெருக்கு          - கடல் கோள் 
  • மேதினி                       -உலகம் 

பொதுவானக்குறிப்புகள்

  • பெருஞ்சித்திரனார் இயற்பெயர் மாணிக்கம் 
  • பாவலரேறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் 
  • பாவியக்கொத்து, நூறாசிரியம் இவரின் படைப்புகள் 

வளர் தமிழ்

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் -பாரதியார்
  • என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் -பாரதியார்    (பாரதத் தாய்க்கு பாடப்பட்டது  இது தமிழ் தாய்க்கும் பொருந்தும்)
  • வலஞ்சுழி எழுத்துக்கள் -ஆ, ஏ, ஔ, ண, ஒ
  • இடஞ்சுழி எழுத்துக்கள் -ட, ய, ழ.  

தமிழ்

தொல்காப்பியம்

தமிழென் கிளவியும் அதனோ ரற்றே

தமிழ்நாடு           

சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்

இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்

தமிழன்

அப்பர் தேவாரம் (திருத்தாண்டகம்)

தமிழன் கண்டாய்






  • உயர்திணை, அஃறிணையென இருவகை திணைகள் 
  • உயர்திணை -எதிர்ச்சொல்   தாழ்திணையென அமைய வேண்டும், ஆனால் (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயரிட்டனர்.

பூவின் ஏழு நிலைகள் 

  1. அரும்பு 
  2. மொட்டு 
  3. முகை 
  4. மலர் 
  5. அலர் 
  6. வீ 
  7. செம்மல்

மா என்ற சொல்லின் பொருள் 

  • மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு,  அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.
⚔  இயல் தமிழ்      =எண்ணத்தை வெளிப்படுத்தும் 
⚔  இசைத்தமிழ்    =உள்ளத்தை மகிழ்விக்கும் 
⚔  நாடகத்தமிழ்     = உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.

இலைளின் பெயர்கள் 

  • இலை      =ஆல், அரசு, மா, பலா, வாழை
  • கீரை        =அகத்தி, பசலை, முருங்கை
  • புல்          =அருகு, கோரை
  • தாள்        =நெல், வரகு

தமிழ் எண்கள்

1- க, 2-உ, 3 -௩, 4 - ச, 5-ரு, 6-௬, 7-எ, 8 - அ, 9-௯, 10-கo,

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்

  • வேளாண்மை    =கலித்தொகை, திருக்குறள் 
  • உழவர்                 = நற்றிணை 
  • பாம்பு                   = குறுந்தொகை 
  • வெள்ளம்            =பதிற்றுப்பத்து  
  • பார்                    =பெரும்பாணாற்றுப்படை  
  • ஒழி                    =தொல்காப்பியம் (கிளவியாக்கம்) 
  • முடி                    =தொல்காப்பியம் (வினையியல்)
 
 ⚔  பிறந்த நாள் வாழ்த்து
    நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!
    வானம் தீண்டும் தூரம்-நீ, வளர்ந்து வாழ 
வேண்டும்!
    அன்பு 
வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!
    எட்டுத்திக்கும் 
பு வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!
    உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்
!
    சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட் டு நாள் 
சொல்லி வாழ்த்துகிறோம்!
    பிறந்த நாள் வாழ்த்துகள்! பிறந்த நாள் வாழ்த்துகள்!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
                    - கவிஞர் அறிவுமதி.


கனவு பலித்தது

  • கடல் நீர் ஆவியாகி மேகமாகி மழை தரும் எனக் கூறும்  பழந்தமிழ் இலக்கியங்கள்-முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை ஆகிய நூல்கள் கூறுகின்றன.
⚔  கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி - கார் நாற்பது
⚔  ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்  நாழி முகவாது நால்நாழி - ஒளவையார்
    • திரவப்பொருள்  எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது
⚔  நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு  -பதிற்றுப்பத்து
    • போர்க்களத்தில்  மார்பில் பட்ட புண்ணை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து கூறுகிறது 

5.தமிழ் எழுத்துக்களின் வகை தொகை 

  • தமிழ்மொழியின் இலக்கண வகை ஐந்து 
  • எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம்
 எழுத்து 
  • ஒலி வடிவாக எழுப்பப்படுவது மற்றும் வரி வடிவமாக எழுதப்படுவது

உயிர் எழுத்துக்கள் 

  • 12 எழுத்துகள்
  • அ, இ, உ, எ, ஒ -5 ம் குறுகி ஒலிக்கும்  
  • ஆ,  ஈ,  ஊ,  ஏ, ஐ, ஓ, ஒள -7 -ம் நீண்டு ஒலிக்கும்
  •  குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு கொண்டவை

மெய்யெழுத்துக்கள் 

  • 18 எழுத்துகள்
  • வல்லினம் க், ச், ட், த், ப், ற்.
  • மெல்லினம்  ங், ஞ், ண், ந், ம், ன்.
  • இடையினம் ய், ர், ல், வ், ழ், ள்.

 கலைச்சொற்கள்

  • வலஞ்சுழி     -Clockwise 
  • செயலி          - App
  • புலனம்          - Whatsapp
  • மின்னஞ்சல் - E-mail

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !