திருக்குறள்

0

I.திருக்குறள்

1.நூல் குறிப்பு

  • திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல்
  •  குறள் ➝இரண்டடி வெண்பா 
  •  திரு ➝சிறப்பு  அடைமொழி  
  • குறள் 80 குறட்பாவை  உணர்த்தாமல் அப்பாக்களால்  ஆகிய  நூலை உணர்ந்துவதால் ➝  ஆகுபெயர்  
  •  திருக்குறள் ➝ அடையெடுத்த கருவியாகுபெயர்  
  •  திருக்குறளின் முதல் பெயர்➝ முப்பால்  
  •  இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
  • திருக்குறள் 3  முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும்  133 அதிகாரங்களையும் கொண்டது 
  •   அறத்துப்பால்➝38 அதிகாரங்கள்➝4 இயல்கள்                   பாயிரவியல் (4), இல்லறவியல் (20),                         துறவறவியல் (13), ஊழியல்(01)
  • பொருட்பால்➝70 அதிகாரங்கள் ➝ 3 இயல்கள்                  அரசியல் (25), அமைச்சியல்(32),                                ஒழிபியல்(13)
  •  காமத்துப்பால்➝25அதிகாரங்கள்➝ 2இயல்கள்                  களவியல்(7), கற்பியல்(18)
இந்தப் பிரிவுகள் கூறுவன 
  • தனிமனிதனது வாழ்வை கூறுவது --> அறத்துப்பால்
  • சமுதாய வாழ்வை கூறுவது -->பொருட்பால்
  • அக வாழ்வை  கூறுவது--> இன்பத்துப்பால் 

2.வேறு பெயர்கள்

  • உலகபொதுநூல்
  • அறவிலக்கியம்  
  • தமிழர் திருமறை 
  • முப்பால் 
  • பொய்யாமொழி 
  • வாயுறைவாழ்த்து 
  • உத்தரவேதம்  
  • தெய்வநூல் 
  • திருவள்ளுவம் 
  • தமிழ்மறை 
  • பொதுமறை 
  • திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்) 
  • பொருளுரை (மணிமேகலை) 
  • முதுமொழி 
  • தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி) 
  • நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
  • திருவள்ளுவ பயன் எனக் கூறியவர் -----நச்சினார்க்கினியார்
  •  தமிழ் மாதின் இனிய உயிர் நிலை  ---கவிமணி
  • தேவர் எனக் கூறியவர் ---நச்சினார்க்கினியர் 
  • தெய்வப்புலவர் என கூறியவர்-- இளம்பூரணார் 
  • பொருளுரையெனக் கூறியவர் ---சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
  •  பொய்யில் புலவர் எனக் கூறியவர் --சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)

3. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

  • நாயனார் 
  • தேவர்(நச்சினார்கினியர்)
  • முதற்பாவலர் 
  • தெய்வப்புலவர் (இளம்பூரணார்) 
  • நான்முகனார் 
  • மாதானுபங்கி(தாய்க்கு நிகரானவர்)
  • செந்நாப்போதார் 
  • பெருநாவலர் 
  • பொய்யில் புலவர் (மணிமேகலை)
  • பொய்யாமொழிப் புலவர் 
  • வான்புகழ் வள்ளுவர்

4. உரையாசிரியர்கள்

  • மணக்குடவர்
  •  பரிமேலழகர் 
  • பரிப்பெருமாள்
  •  திருமலையர் 
  • மல்லர் 
  • தருமர் 
  • காளிங்கர் 
  • தாமத்தர் 
  • பரிதி 
  • நச்சர்
  • இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர்  ஆவர்
  • சிறந்த உரை பரிமேலழகர் உடையது
  •  முதன் முதலில் உரையிட்டவர்--- மணக்குடவர் 
  • முதன் முதலில் அச்சிட்டவர்----- தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
  • உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் ----தருமர் 
  • காலத்தால் பிந்தியவர் ---பரிமேலழகர் 
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர் 
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் ---ராமானுஜ கவிராயர்
  • "தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்              பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள்"  என்பது பழம்பாடல்

5. சிறப்புகள்

  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது 
  • பதினெண்கீழ்கணக்கு நூல்களில் இதுவே மிகப் பெரியது, அதிக பாடல்கள் கொண்டது 
  • மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறநூல் திருக்குறள் 
  • அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் 7 இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது 
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் உள்ளது
  •  திருக்குறளில் 10 அதிகாரங்களில் பெயர்கள் உடைமை -என முடியும் 
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமையைக் குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாக்களின் தொகுப்பு
  • விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
  • இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள்  விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது 
  • திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும் யானை 8 முறையும் பாம்பு 3 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது 
  • திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த  2 அதிகாரங்கள்  குறிப்பறிதல் (பொருட்பால்) குறிப்பறிதல் (காமத்துப்பால்) 
  • கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள்  உள்ளன
  •  46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன 
  • "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து"                            என்ற குறளில்  1 5 7 என்ற பகா எண்கள் உள்ளது
  •  ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும் ஒரே சொல் நான்கு முறை 22 குறட்பாக்களிலும் ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம்பெற்றுள்ளது
  •  தமிழ், கடவுள் என்ற சொற்கள்  இடம் பெறவில்லை
  •  ஒரு முறை மட்டும் இடம் பெற்ற எழுத்து --- ளீ, ங
  •  50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன 
  • மொத்த சொற்கள் ---12000
  •  மொத்த எழுத்துக்கள்---- 42,194 
  • திருக்குறளில் தமிழ் எழுத்து 247-இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை 
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் ---அனிச்சம், குவளை 
  • திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் ---நெருஞ்சிப்பழம் 
  • திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை ---குன்றிமணி 
  • பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து --ஔ 
  • இடம்பெற்ற இரு மரங்கள் --பனை, மூங்கில் 
  • அதிகம் பயன்படுத்திய எழுத்து --னீ(1705) 
  • இடம்பெறாத ஒரே எண் 9 
  • கோடி என்ற சொல் 7 முறை இடம்பெற்றுள்ளது 
  • 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
  •  ஏழுபது கோடி ஒரு முறை வந்துள்ளது
  • 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் தமிழக அரசு நிறுவியது 

6. மொழிபெயர்ப்புகள்

  • 107 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது
  • ஆங்கிலத்தில்  முதன் முதலாக மொழிப்பெயர்த்தவர்----ஜீ.யு.போப்(1886)
  • ஆங்கிலத்தில்  40பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர்  பேசும் வக்கபோலி   மொழிக்கு      மொழிபெயர்த்தவர் ---கிட்டு சின்னமணி
  • இலத்தீன்------வீரமாமுனிவர்
  • ஜெர்மன்-----கிரால்
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர்கள்---- உ.வே.சு.ஐயர், இராஜாஜி 
  • பிரெஞ்சு-----ஏரியல்
  • வடமொழி-----  அப்பாதீட்சிதர்
  • தெலுங்கு  --வைத்தியநாத பிள்ளை
  •  இந்தி ---பி.டி.ஜெயின் 
  • திருக்குறள் கருத்தை 1994ஆம் ஆண்டு முதன்முறையாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் கிண்டெர்ஸ்லே

7.குறிப்புகள்

  • திருக்குறள் முன்னோடி ---புறநானூறு 
  • திருக்குறளின் விளக்கம்----- நாலடியார்(சமண முனிவர்கள்)
  •  திருக்குறளின் பெருமையைக் கூறுவது ----திருவள்ளுவமாலை 
  • திருக்குறளில் சாரம் எனப்படுவது ---நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
  •  திருக்குறளின் ஒழிப்பு எனப்படுவது ----திருவருட்பயன் (உமாபதி சிவம்)
  • திருக்குறள்  நடையியல் நூல்  ஆசிரியர்  ----இ.சுந்தரமூர்த்தி
  • அரசு, வேளாண்மை, மருந்து, அன்பு, உயிர் மற்றும் மகிழ்ச்சி என்ற சொற்கள்  பயன்படுத்தபட்டுள்ளது

8.கூற்றுகள்

  • நூலும் இரண்டும்  சொல்லுக்குறுதி---> நாலடியார், திருக்குறள் 
  • தமிழுக்கு கதி --->கம்பராமாயணம், திருக்குறள்
  • முப்பெரும்  நூல்கள்==திருக்குறள்,  நாலடியார், பழமொழி நானூறு 
  • "பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில் "

9.புகழுரைகள்

  • பாரதியார்" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த  வான் புகழ் கொண்ட தமிழ்நாடு"                   "கம்பனைப்  போல்  வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்  பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை "
  • பாரதிதாசன் "வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே",      "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே"
  • மனோன்மணியம் சுந்தரனார் "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்  உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொருநீதி".
  • சுத்தானந்தபாரதி. "எம்மதம் எவ்வினமும் எந்நாளும்  சம்மதம் என்று ஏற்கும்  தமிழ் வேதம்"
  • திரு.வி.க "திருக்குறள் ஒரு வகுப்பிற்கோ ஒரு மதத்திற்கோ ஒரு நிறத்திற்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு  நாட்டிற்கோ உரியதன்று அது மன்பதைக்கு உலகுபொது"
  • கி.ஆ.பெ.விஸ்வநாதன்" திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன்  எனும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரியாது",  "திருக்குறள் என்று நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்  மொழி உலகிற்கு தெரியாது "
  • " அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்"  ஔவையார்
  • கால்டுவெல் "உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும்  இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்"
  • காந்தியடிகள்   " சோவியத்து அறிஞர் தால்சுதாய்  வழிகாட்டுதலின திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க  விரும்பியே தமிழ்  பயிலத் தொடங்கினேன் "
  • இறையனார் "குன்றாத செந்தளிர் கற்பகத்தின்                              தெய்வத் திருமலர்போன்ம்           மண்புலவன் வள்ளுவன்  வாய்ச்சொல்"
  • இடைகாடர்" கடுகை துளைத்து ஏழ்கடல் புகட்டிக் குறுகத்  தரித்து குறள்"
  • "தினையளவு  போதாச் சிறுபுல்நீர் நீண்ட   பனையளவு  காட்டும் படித்தால்- மனையளகு  வள்ளைக்கு  உறங்கும் வளநாட வள்ளுவனார்  வெள்ளைக் குறட்பா விரி"----கபிலர்

10.திருவள்ளுவமாலை

  • திருக்குறள் பெருமை கூற எழுந்த  நூல்
  • தொகுத்தவர்-----> கபிலர்
  • 53 புலவர்கள்  பாடியுள்ளனர்
  • மொத்த பாடல்கள்  55
  • இரு பாடல்கள்   பாடிய புலவர்கள்--ஔவையார், கபிலர்
  • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா மற்றும் வடமலை வெண்பா  ஆகியவையும்  திருக்குறள்  பெருமை கூறவனவாகும்

11.திருவள்ளுவர் காலம்

  • கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
  • கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
  • கி.மு.1-3 = இராசமாணிக்கனார்
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !